Saturday, November 8, 2008

ஒரு எழுத்தில் பின்னூட்டம்

`




























`
















`























`


































இந்த‌ வெறுமையை ப‌திவுல‌கிற்கு ச‌ம‌ர்பிக்கிறேன்.
மேலே உள்ள வெற்று இடத்தில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.(சில நாட்களுக்குப் பிறகு).
எனவே தாங்கள் இப்பொழுது வெற்றிடத்தைப் படித்து மன்னிக்கவும் பார்த்துப் பிறகு படிக்கவும் என வேண்டுகிறேன்.
தாங்கள் பார்க்காவிட்டாலும்,படிக்காவிட்டாலும் தாங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.
என்னாலும் மி்க நீளமான பெரிய பதிவு போடமுடியும் என்று இப்பதிவின் மூலம் பதிவுலகிற்கு அறிவிக்கிறேன்.
என்னுடைய பெரிய பதிவிற்கு தாங்களால் இயன்ற பின்னூட்டத்தை இடுங்கள்.(பின்னூட்டம் பெரியதாக இருக்க வேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லை. ஒரு எழுத்தில் இருந்தாலும் பரவாயில்லை.)என்னது ஒரு எழுத்தில் பின்னூட்டமா? பதிவுலகில் ஒரு எழுத்தில் பின்னூட்டம் போடுபவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...........................................................................................................................................

Saturday, October 11, 2008

க‌விதைத் துளி

ஞானோத‌ய‌ம்

அத்தி பூத்தாற் போலுன்
அழ‌கு முக‌ங் காட்டி
அமுத‌த்தில் ந‌னைத் தெடுத்த‌
அமுத‌‌மாய் என்னுள் தித்தித்தாய்

புன்ன‌கை பூத்து ம‌ன‌தை
புண்ணாக்கி விழியால் விளையாடி
புதுயுக‌ம் ப‌டைப்போம் வாவென‌
புதுமை வ‌ழியில் அழைத்தாய்

ஆத்தா அப்ப‌னுக்கு க‌டைசியில்
ஆத‌ர‌வாய் இருக்க‌ வேண்டிய‌வ‌ன்
ஆருயிர் போலுன்னை எண்ணி
ஆறுத‌லாய் நீயிருப் பாயென‌

ஊரு விட்டு ஊருவ‌ந்து
ஊரெல்லாம் அழைந்து ச‌ம்பாதித்த‌தை
ஊதாரியாய் செல‌வு செய்து
உதாசீன‌ப் படுத்துவாய் என‌

என‌க்குத் தந்தையாகுமுன் தெரிந்திருந்தால்
என் வாழ்நாளில் மீதியை
என்னூரில் நிம்ம‌தியாய் கழித்திருப்பேன்.





விஞ்ஞான‌ம்

இய‌ற்கையாய் உழ‌வு செய்தால்
ஏழைக‌ளின் ப‌சியை ஆற்ற‌லாம்
இரசாய‌ன‌த்தைக் கொண்டு செய்தால்
மாத்திரையால் வ‌யிற்றை நிர‌ப்ப‌லாம்

கணினியால் ப‌ல‌கல்வி க‌ற்று
மாமேதையாய் வ‌ல‌ம் வ‌ர‌லாம்
ப‌லக‌ல‌வி ப‌யின்று ம‌ன்ம‌த‌னாய்
போத‌யிலே உலாவும் வ‌ர‌லாம்

கத்தியாலே குத்து ப‌ட்டால்
ம‌ருத்துவம‌னை சென்று பிழைக்க‌லாம்
ஏவுக‌ணையால் குண்டு பொழிந்தால்
கூண்டோடு கைலாய‌ம்தான் போக‌லாம்

உல‌கை கைக்குள் அட‌க்க‌லாம்
காயைக் க‌னிய‌ வைக்க‌லாம்
தூர‌த்து நில‌வில் குடியேற‌லாம்
நிமிட‌த்தில் உலகையும் அழிக்க‌லாம்

மாற்றங்க‌ள் ப‌ல‌ நிக‌ழ்ந்தாலும்
இயற்கைக்கும் ம‌னித‌ உயிருக்கும்
பங்க‌ம் விளைவிக்காத‌ விஞ்ஞான
வ‌ளர்ச்சியை ம‌ல‌ர்தூவி வ‌ரவேற்க‌லாம்

விஞ்ஞான‌த்தால் இய‌ற்கையை அழித்து
ம‌னித‌ நேய‌த்தை ம‌ற‌ந்தால்
ம‌னித‌ ச‌முதாய‌ம் ம‌ண்ணோடு
ம‌ண்ணாய் ம‌க்கி உர‌மாக‌லாம்.

பாக். நிலநடுக்கம்: பலி 100 ஆக உயர்ந்தது!

பாகிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

குவெட்டா நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 70 கி.மீட்டரில் இன்று அதிகாலையில் 5 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.4 ஆகப் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அதிகாலை நேரம் என்பதால், மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். பலர் தூங்கிய நிலையிலேயே உயிரிழந்தனர். வீடுகள் இடிந்து விழுந்ததிலும், கட்டிட மேற்கூரைகள் சாய்ந்தும் கிடப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

கடந்த 1935ஆம் ஆண்டில் குவெட்டாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நில‌ந‌டுக்க‌த்திற்கு ப‌லியானவ‌ர்களின் குடும்ப‌திற்கு ஆழ்ந்த‌ அனுத‌ப‌ங்க‌ள்!

முன்ன‌தும்,பின்ன‌தும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-எப்ப‌டி நினைத்தாலும் ச‌ரி(யே)

முத‌லில் பாலின‌ம் பார்த்து உறுதிப‌டுத்திக் கொள்ள‌வும். (பாலின‌ம்(sex) மாறினால் பின் விளைவுக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டிருக்கும்).

பாலின‌ப் பிரிவு பார்க்க‌ வேண்டிய‌து இல்லை. (நேரமும்,கால‌மும் தான் இங்கு).

க‌த‌வைச் சாத்தி தாழிட‌வும். (யாரும் வ‌ந்துவிட‌க் கூடாத‌ல்ல‌வா?).

க‌த‌வு இருந்தால்த‌னே தாழ் போட‌ வெட்ட‌வெளி.(யார் வேண்டுமானாலும் வ‌ர‌லாம், பார்க்க‌லாம்).

இந்த‌ இடத்தைதான் ப‌ய‌ன்ப‌டுத்த வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

எல்லா இட‌மும் ந‌மதே.

பையில் உள்ள‌ காசு, ப‌ண‌ம் ஜாக்கிர‌தை.(குழியில் விழுந்து விட‌லாம்).

அந்த‌ பிர‌ச்சினை இங்கு இல்லை.(இங்கு தான் குழியே இல்லையே).

காரிய‌ம் முடிந்த‌தும் த‌ண்ணீ விட வேண்டும் .(இல்லையென்றால் பின்னால் வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ண்ணீ முன்ன‌ரே இட‌ வேண்டி வ‌ரும்).

இருந்தால் அங்கேயே விடலாம்,இல்லையென்றால் இருக்க‌வே இருக்கு குள‌மோ, குட்டையோ.(அடுத்த‌வ‌ருக்கு வேறு இட‌ம்தான்.யூஸ் அன்ட் த்ரோ).

என்ன‌ ஆச்சு? தொட‌ர்ந்து மேலே ப‌டித்து விட்டுத் தொட‌ருங்க‌ள்.



முன்சொன்ன‌து TOILET என்றுள்ள‌ இட‌த்தில்.( TO LET என்றுள்ள‌ இட‌த்தில் அல்ல‌).

பின் சொன்ன‌து குள‌க்க‌ரையோ, ஆற்ற‌ங்க‌ரையோ (க‌ரை யென்றால் கொஞ்சம் த‌ள்ளி, க‌ரையில் தான் போவேன் என‌ அட‌ம்பிடிக்க‌க் கூடாது).

முன்ன‌து சிற‌ந்த‌து,பாதுகாப்பான‌து, ச‌வுக‌ரிய‌மான‌து.

பின்ன‌தைப் ப‌ற்றி நான் சொல்லத் தேவையில்லை தானே?

என‌வே, எல்லாரும் முன்ன‌தை மட்டுமே பய‌ன்ப‌டுத்தி முன்ன‌தும்,பின்ன‌தும் போய் நோய‌ற்ற‌ பெரு வாழ்வு வாழ‌ வேண்டுகிறேன்.

முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)




முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்,
நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.
மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
[ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL) ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.] Source - (The Hundred) தமிழில் அந்த நூறு பேர்.
ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா)
‘நிச்சயமாக நீர் மிக உயர்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ (68:04)
காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். (மகாத்மா காந்தி)
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.(டாக்டர் ஜான்சன்)
இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (33:21)
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். (ஜவஹர்லால் நேரு)
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:01)
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். (எஸ். எச். லீடர்)
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? (வாஷிங்டன் இர்விங்)
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார் (48:29)
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். (தாமஸ் கார்லைல்)
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம் பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2:99)
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்)
இவர்களுக்காக துக்கமும், வேதனையும் அடைந்தே உமது உயிர் போய்விட வேண்டாம்’. (35:08)
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. (கலைஞர் கருணாநிதி)
முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையான நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்னைகளையும் கேள்விகளையும் தாம் எழுப்புகிறதே தவிர பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாயில்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.(Mohammed at Mecca , Oxford 1932, P.52)
அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(Edaward Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54)
மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)
அவன் தான் என்னுடைய தூதரை நேரான வழியைக் கெண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (2:32)
இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும். நமக்கு இருக்கின்ற கருத்துவேருபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பழையபடி நாம் மனதுக்குள் சில கருப்புப்புள்ளிகளை வைத்துக்கொண்டு இன்னும் அவர்கள் மீது மனித தன்மையற்ற செயல்களை செய்ய முற்பட்டால் இன்னும் ஒரு நபியல்ல ஓராயிரம் நபி வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவனாக!

௰,௱,௲- என்றால் என்ன‌வென்று உங்க‌ளில் எத்த‌னை பேருக்குத் தெரியும்?

பார்த்த‌தும் சொல்லிவிட்டால் உங்க‌ளுக்கு த‌மிழ் மாமணி விருது
௧=1
௨=2
௩=3
௪=4
௫=5
௲=6
௭=7
௮=8
௯=9
௰=10
௱=100
௲=1000

Monday, September 29, 2008

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

இன்று (30-09-08 )ரமலான் பெருநாள் கொண்டாடும் வளைகுடா வாழ் மக்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..!

Sunday, September 28, 2008

முதியோர் இல்ல‌ங்க‌ளுக்கு மூடுவிழா

கேர‌ள மாநில‌ம் கோட்ட‌ய‌த்தைச் சேர்ந்த‌ 84 வ‌ய‌தான‌ ல‌ட்சுமி குட்டி ப‌க்க‌வாத‌ நோயால் பாதிக்க‌ப் ப‌ட்டிருந்தார்.அவ‌ருடைய‌ இர‌ண்டு ம‌க‌ன்க‌ளும்,மூன்று ம‌க‌ள்க‌ளும் அவ‌ரைக் கண்டு கொள்ள‌ வில்லை. இத‌னை அறிந்த‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் அவ‌ரை ம‌ருத்துவ‌ ம‌னையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்ன‌ர் ஓர் முதியோர் இல்ல‌த்தில் சேர்த்த‌ன‌ர்.
மூத்த‌ குடிம‌க்க‌ள் பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தின் கீழ் பெற்ற‌ தாயைப் பராம‌ரிக்காத‌ மூத்த‌ மக‌னை போலீசார் கைது செய்த‌ன‌ர்.இளைய‌ ம‌க‌ன் ம‌ற்றும் ம‌க‌ள்க‌ள் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ள‌ன‌ர்.
மூத்த‌ குடிம‌க்க‌ள் பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தின் கீழ் ஒருவ‌ர் கைது செய்யப் ப‌ட்டு இருப்ப‌தும் வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப் ப‌ட்டிருப்ப‌தும் இந்தியாவிலேயே இதுதான் முத‌ல் முறை.
உதிர‌ம் சிந்தி வ‌ள‌ர்த்த‌ தாய்க்கும்,த‌ந்தைக்கும் க‌டைசி கால‌த்தில் கஞ்சி ஊத்தாத‌ பிள்ளைக‌ளுக்கு சிறை என்பது வ‌ரவேற்க‌த் த‌க்க‌ சட்ட‌ம். இத‌னால் முதியோர் இல்ல‌ங்க‌ள் மூடுவிழா கொண்டாடும் என்பதில் ஐய‌மில்லை.

இது நியாய‌மா அம்மா?

க‌ருப்போ,சிவ‌ப்போ!
நெட்டையோ,குட்டையோ!
குருடோ,செவிடோ!
ஏழையோ,ப‌ண‌க்காரியோ!
நொண்டியோ,முட‌மோ!
அப‌லையோ,ச‌ம்சாரியோ!
எப்ப‌டியாக‌ நீயிருந்தாலும் உன்னைத்
தாயாக‌ நான் ஏற்பேன‌ம்மா!
பெண்ணாக‌ நான் பிற‌ப்ப‌த‌ற்காக‌
கொல்வ‌து நியாய‌மா அம்மா?

இல‌ங்கை அதிப‌ர் ராஜ‌ப‌க்சேக்கு ந‌ன்றி

ஐ.நா.ச‌பை பொதுக்குழுவில் கல‌ந்து கொண்ட‌ இல‌ங்கை அதிப‌ர் ராஜ‌பக்சே க‌ட‌ந்த‌ 24ந் தேதி த‌மிழில் உரையாற்றினார்.சுமார் 7கோடிக்கும் அதிக‌மாக‌ மக்க‌ள் வாழும் த‌மிழ் மொழி உல‌க‌ அர‌ங்கில் ஒலிப்ப‌து இதுவே முத‌ல் முறை.த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிராக‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ளும் ராஜ‌ப‌க்சே த‌மிழில் பேசி த‌மிழை உல‌க அர‌ங்கில் ஒலிக்க‌ச் செய்து உள்ளார்.ப‌ல‌ நூறாண்டு பழ‌மை வாய்ந்த‌ த‌மிழை உல‌க அர‌ங்கில் ஒலிக்க‌ச் செய்த‌ ராஜ‌ப‌க்சேக்கு(த‌மிழ‌னுக்கு எதிராக கொடுமைக‌ளைச் செய்தாலும்) த‌மிழ‌ன் என்ற‌ முறையில் என‌து ந‌ன்றியினைத் தெறித்துக் கொள்கிறேன்.

அறிமுக‌ம்

என‌து வ‌லைப்பூவில் உங்க‌ளை எல்லாம் ச‌ந்திப்ப‌தில் பெரு ம‌கிழ்ச்சிய‌டைகின்றேன்.