ஞானோதயம்
அத்தி பூத்தாற் போலுன்
அழகு முகங் காட்டி
அமுதத்தில் நனைத் தெடுத்த
அமுதமாய் என்னுள் தித்தித்தாய்
புன்னகை பூத்து மனதை
புண்ணாக்கி விழியால் விளையாடி
புதுயுகம் படைப்போம் வாவென
புதுமை வழியில் அழைத்தாய்
ஆத்தா அப்பனுக்கு கடைசியில்
ஆதரவாய் இருக்க வேண்டியவன்
ஆருயிர் போலுன்னை எண்ணி
ஆறுதலாய் நீயிருப் பாயென
ஊரு விட்டு ஊருவந்து
ஊரெல்லாம் அழைந்து சம்பாதித்ததை
ஊதாரியாய் செலவு செய்து
உதாசீனப் படுத்துவாய் என
எனக்குத் தந்தையாகுமுன் தெரிந்திருந்தால்
என் வாழ்நாளில் மீதியை
என்னூரில் நிம்மதியாய் கழித்திருப்பேன்.
விஞ்ஞானம்
இயற்கையாய் உழவு செய்தால்
ஏழைகளின் பசியை ஆற்றலாம்
இரசாயனத்தைக் கொண்டு செய்தால்
மாத்திரையால் வயிற்றை நிரப்பலாம்
கணினியால் பலகல்வி கற்று
மாமேதையாய் வலம் வரலாம்
பலகலவி பயின்று மன்மதனாய்
போதயிலே உலாவும் வரலாம்
கத்தியாலே குத்து பட்டால்
மருத்துவமனை சென்று பிழைக்கலாம்
ஏவுகணையால் குண்டு பொழிந்தால்
கூண்டோடு கைலாயம்தான் போகலாம்
உலகை கைக்குள் அடக்கலாம்
காயைக் கனிய வைக்கலாம்
தூரத்து நிலவில் குடியேறலாம்
நிமிடத்தில் உலகையும் அழிக்கலாம்
மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும்
இயற்கைக்கும் மனித உயிருக்கும்
பங்கம் விளைவிக்காத விஞ்ஞான
வளர்ச்சியை மலர்தூவி வரவேற்கலாம்
விஞ்ஞானத்தால் இயற்கையை அழித்து
மனித நேயத்தை மறந்தால்
மனித சமுதாயம் மண்ணோடு
மண்ணாய் மக்கி உரமாகலாம்.
Saturday, October 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment