கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 84 வயதான லட்சுமி குட்டி பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்.அவருடைய இரண்டு மகன்களும்,மூன்று மகள்களும் அவரைக் கண்டு கொள்ள வில்லை. இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அவரை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் ஓர் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெற்ற தாயைப் பராமரிக்காத மூத்த மகனை போலீசார் கைது செய்தனர்.இளைய மகன் மற்றும் மகள்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப் பட்டு இருப்பதும் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்பதும் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.
உதிரம் சிந்தி வளர்த்த தாய்க்கும்,தந்தைக்கும் கடைசி காலத்தில் கஞ்சி ஊத்தாத பிள்ளைகளுக்கு சிறை என்பது வரவேற்கத் தக்க சட்டம். இதனால் முதியோர் இல்லங்கள் மூடுவிழா கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.
Sunday, September 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment