முதலில் பாலினம் பார்த்து உறுதிபடுத்திக் கொள்ளவும். (பாலினம்(sex) மாறினால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிருக்கும்).
பாலினப் பிரிவு பார்க்க வேண்டியது இல்லை. (நேரமும்,காலமும் தான் இங்கு).
கதவைச் சாத்தி தாழிடவும். (யாரும் வந்துவிடக் கூடாதல்லவா?).
கதவு இருந்தால்தனே தாழ் போட வெட்டவெளி.(யார் வேண்டுமானாலும் வரலாம், பார்க்கலாம்).
இந்த இடத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
எல்லா இடமும் நமதே.
பையில் உள்ள காசு, பணம் ஜாக்கிரதை.(குழியில் விழுந்து விடலாம்).
அந்த பிரச்சினை இங்கு இல்லை.(இங்கு தான் குழியே இல்லையே).
காரியம் முடிந்ததும் தண்ணீ விட வேண்டும் .(இல்லையென்றால் பின்னால் வருபவர்கள் தண்ணீ முன்னரே இட வேண்டி வரும்).
இருந்தால் அங்கேயே விடலாம்,இல்லையென்றால் இருக்கவே இருக்கு குளமோ, குட்டையோ.(அடுத்தவருக்கு வேறு இடம்தான்.யூஸ் அன்ட் த்ரோ).
என்ன ஆச்சு? தொடர்ந்து மேலே படித்து விட்டுத் தொடருங்கள்.
முன்சொன்னது TOILET என்றுள்ள இடத்தில்.( TO LET என்றுள்ள இடத்தில் அல்ல).
பின் சொன்னது குளக்கரையோ, ஆற்றங்கரையோ (கரை யென்றால் கொஞ்சம் தள்ளி, கரையில் தான் போவேன் என அடம்பிடிக்கக் கூடாது).
முன்னது சிறந்தது,பாதுகாப்பானது, சவுகரியமானது.
பின்னதைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை தானே?
எனவே, எல்லாரும் முன்னதை மட்டுமே பயன்படுத்தி முன்னதும்,பின்னதும் போய் நோயற்ற பெரு வாழ்வு வாழ வேண்டுகிறேன்.
Saturday, October 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எதுக்கு இந்த கொலை வெறி ??
ரசித்து சிரித்து படித்தேன்..
நன்றி அணிமா,வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
அருமை
ஏன் இப்படி கூட பதிவு போடலமோ...
ரசித்து படித்தேன்.
நன்றிsenthil velayuthan,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
Post a Comment