Monday, September 29, 2008
இனிய பெருநாள் வாழ்த்துக்கள்
இன்று (30-09-08 )ரமலான் பெருநாள் கொண்டாடும் வளைகுடா வாழ் மக்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..!
Sunday, September 28, 2008
முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 84 வயதான லட்சுமி குட்டி பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்.அவருடைய இரண்டு மகன்களும்,மூன்று மகள்களும் அவரைக் கண்டு கொள்ள வில்லை. இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அவரை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் ஓர் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெற்ற தாயைப் பராமரிக்காத மூத்த மகனை போலீசார் கைது செய்தனர்.இளைய மகன் மற்றும் மகள்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப் பட்டு இருப்பதும் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்பதும் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.
உதிரம் சிந்தி வளர்த்த தாய்க்கும்,தந்தைக்கும் கடைசி காலத்தில் கஞ்சி ஊத்தாத பிள்ளைகளுக்கு சிறை என்பது வரவேற்கத் தக்க சட்டம். இதனால் முதியோர் இல்லங்கள் மூடுவிழா கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.

இது நியாயமா அம்மா?
கருப்போ,சிவப்போ!
நெட்டையோ,குட்டையோ!
குருடோ,செவிடோ!
அபலையோ,சம்சாரியோ!
எப்படியாக நீயிருந்தாலும் உன்னைத்
தாயாக நான் ஏற்பேனம்மா!
பெண்ணாக நான் பிறப்பதற்காக
கொல்வது நியாயமா அம்மா?
நெட்டையோ,குட்டையோ!
குருடோ,செவிடோ!
ஏழையோ,பணக்காரியோ!
நொண்டியோ,முடமோ!அபலையோ,சம்சாரியோ!
எப்படியாக நீயிருந்தாலும் உன்னைத்
தாயாக நான் ஏற்பேனம்மா!
பெண்ணாக நான் பிறப்பதற்காக
கொல்வது நியாயமா அம்மா?
இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நன்றி
ஐ.நா.சபை பொதுக்குழுவில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த 24ந் தேதி தமிழில் உரையாற்றினார்.சுமார் 7கோடிக்கும் அதிகமாக மக்கள் வாழும் தமிழ் மொழி உலக அரங்கில் ஒலிப்பது இதுவே முதல் முறை.தமிழர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ராஜபக்சே தமிழில் பேசி தமிழை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து உள்ளார்.பல நூறாண்டு பழமை வாய்ந்த தமிழை உலக அரங்கில் ஒலிக்கச் செய்த ராஜபக்சேக்கு(தமிழனுக்கு எதிராக கொடுமைகளைச் செய்தாலும்) தமிழன் என்ற முறையில் எனது நன்றியினைத் தெறித்துக் கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)